சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் புஸ்குடியைச் சேர்ந்த துபா கன்ஹையா என்றும் மற்றொருவர் யலாம் தர்மையா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் கம்லோசன் காஷ்யப் கூறுகையில், “பிஜப்பூர் மாவட்டத்தை அடுத்துள்ளது புஸ்குடி கிராமம். இது மோடக்பால் காவல் நிலையத்தின் மேற்பார்வைக்குள் இருக்கும் கிராமமாகும். அக்கிராமத்தின் அருகே நேற்று (ஏப்ரல் 17) அதிகாலை 4 மணியளவில் சி.ஆர்.பி.எப் 229ஆவது பட்டாலியன் குழு நடத்திய சோதனை அணிவகுப்பை நடத்தினர்.
முர்கினாரை கடந்து இருந்து 4 கி.மீ தூரத்தில் காட்டில் முகாம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கவனித்துள்ளனர். அவர்கள் யாரென அறிய அவர்களது அடையாளத்தை கூறுமாறுக் கோரி கூச்சலிட்டனர். ஆனால் அவர்கள் பாதுகாப்புப் படை குழுவினர் அறிவிப்புக்கு பதில் அளிக்காமல் இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து, பாதுகாப்புப் படை குழுவினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தி முடித்த பின்னர், அந்த குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்புப் படையினர் அடைந்தபோது காயங்களுடன் இருவரைக் கண்டுள்ளனர். பின்னர், அவர்களை மீட்டு பிஜப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே, சிகிச்சை பலனின்றி அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்” என அவர் தெரிவித்தார்.