அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிராங் மாவட்டத்திலுள்ள டபாபில் என்ற கிராமம் முழுவதுமாக மூழ்கியுள்ளது. அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள இடங்களுக்கு தங்கள் உடைமைகளை எடுத்துச் சென்று வருகின்றனர்.
அஸ்ஸாம் வெள்ளம் - மூழ்கியது கிராமம் - assam flood
திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சிராங் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் முழுமையாக மூழ்கியுள்ளது.
அஸ்ஸாம் வெள்ளம் - மூழ்கியது கிராமம்
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநில பேரிடர் மீட்புப் படையினர் அக்கிரமத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அரசு தரப்பில் யாரும் தொடர்பு கொள்ளாததால் கிராம மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.