சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக ஜூலை 22ஆம் தேதி இஸ்ரோ நிறுவனத்தால் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சந்திரயான் 2 விண்கலத்தின் இறுதியான ஐந்தாவது சுற்றுப்பாதை வெற்றிகரமாக மாற்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் நேற்று பிற்பகல் 1.16 மணியளவில் தனியாகப் பிரிந்தது.
#சந்திரயான்2 - விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை குறைப்பு! - இஸ்ரோ
சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் நேற்று பிரிந்ததையடுத்து, அதனுடைய சுற்றுப்பாதையை இஸ்ரோ வெற்றிகரமாக குறைத்துள்ளது.
vikram lander
இந்நிலையில் தனியாகப் பிரிந்த விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதையை இஸ்ரோ வெற்றிகரமாக குறைத்துள்ளது. பின்னர், வரும் 7ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும். அது தரையிறங்கிய நான்கு மணி நேரத்தில் பிரக்யான் கலம் நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வினை மேற்கொள்ளும்.