தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புல்வாமா தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்!

டெல்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

pulwama

By

Published : Feb 15, 2019, 1:25 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே அமைந்துள்ளது அவந்திபுரா. இங்குள்ள ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 2500 பேர், 78 வாகனங்களில் பலத்த பாதுகாப்போடு ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவந்திபுரா பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய காரில் வந்த தீவிரவாதிகள் திடீரென ராணுவ வாகனத்தை குறி வைத்து தாக்குதலை நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

ராம்நாத் கோவிந்த் (குடியரசுத்தலைவர்):

பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக தேசம் ஒன்றிணைந்துள்ளது. மரணம் அடைந்த வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


வெங்கய்யா நாயுடு (துணை குடியரசுத்தலைவர்):

பயங்கரவாத தாக்குதலில், சிஆர்பிஃஎப் வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்.

நரேந்திர மோடி (பிரதமர்):

உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது. வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு நாடே தோள் கொடுத்து நிற்கிறது.

ராகுல் காந்தி ( காங்கிரஸ் தலைவர்):

இந்த கோழைத்தனமான தாக்குதலால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

சோனியா காந்தி (காங்கிரஸ் முன்னாள் தலைவர்):

தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதிக்கு முன்னிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.


அருண் ஜெட்லி (மத்திய நிதியமைச்சர்):

காஷ்மீரில் சிஆர்பிஃஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கம். இதற்குக் காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

ராஜ்நாத் சிங் (மத்திய உள்துறை அமைச்சர்):

புல்வாமாவில் தாக்குதல் நடத்தியவர்களை கொல்வதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கும். உயிரிழந்த ஒவ்வொரு வீரருக்கும் தலை வணங்குகிறேன்.

பியூஷ் கோயல் (ரயில்வே துறை அமைச்சர்):

காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதலில் நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தது மிகுந்த கவலை அளிக்கிறது. உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணம் பெற வேண்டும்.

மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்):

தைரியமான நமது வீரர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும். இதற்காக வேண்டிக் கொள்கிறேன்

நவீன் பட்நாயக் (ஒடிசா முதல்வர்):

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஃஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்):

புல்வாமாவில் இருந்து பெரிய அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. பலர் உயிர் இழக்கக் காரணமான தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்

மு.க.ஸ்டாலின் (தமிழக எதிர்க்கட்சித் தலைவர்):

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்தியது கோழைத்தனமான தாக்குதல். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

ABOUT THE AUTHOR

...view details