தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா அபாயம் - தனிமைப்படுத்திக்கொண்ட குஜராத் முதலமைச்சர் - குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி

காந்திநகர்: தன்னை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கரோனா வைரஸ் உறுதியானதையடுத்து குஜராத் முதலமைச்சர் தனிமைப்படுத்திக்கொண்டார்.

vijay rupani
vijay rupani

By

Published : Apr 15, 2020, 3:50 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜமலாபூர் தொகுதியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் கேதாவாலா தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா பாதிப்பு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய 6 மணி நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரானுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியிருப்பது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் நிதின் படேலும் உடன் இருந்துள்ளார்.

இதையடுத்து மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். மேலும் இனி அலுவல் நடவடிக்கையை கானொலி காட்சி மூலம் மேற்பார்வை செய்யவுள்ளதாகவும் முதலமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் இதுவரை 650 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:'கரோனா பாதித்த டெல்லி இளைஞர் சிக்கியது எப்படி?' - பரபரப்பு தகவல்கள்

ABOUT THE AUTHOR

...view details