இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா, வைர வியாபாரி நீரவ் மோடி ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்றனர். வெளிநாடுகளில் இருந்து இவர்களை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேற்கொண்டு வருகிறது.
'விஜய் மல்லையா, நீரவ் மோடி குறித்த ஆர்டிஐ கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு!
டெல்லி: வங்கிகளில் மோசடி செய்து நாட்டை விட்டு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரின் நாடு கடத்தல் நடவடிக்கை குறித்த விவரங்களை தகவல் உரிமை சட்டதில் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் இருவரையும், இந்தியா அழைத்து வருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சகம் "மல்லையா மற்றும் நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளன. தகவல்களை அளிப்பதால் வழக்கின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மல்லையா மற்றும் நீரவ் மோடி தொடர்பான விவரங்களைத் தர இயலாது" என தெரிவித்துள்ளது.