பொதுத்துறை வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2016 ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்றார். அவரை இந்தியாவுக்கு சி.பி.ஐ, அமலாக்கத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, லண்டன் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, மல்லையா-வை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அவரது தரப்பில் இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்திய பொதுத்துறை வங்கிகளை குறைக்கூறி அவ்வப்போது விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்,அந்த வரிசையில், விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெட் ஆர்வேஸ் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் பொதுத்துறை வங்கிகளில் செயல்பாடு குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், " கிங்ஃபிஸ்ஷர் நிறுவனத்திற்கு கடும் போட்டி நிறுவனமாக திகழ்ந்த ஜெட் ஏர்வேஸ், தற்போது அழிவின் விளம்பில் இருப்பது வருத்தமளிக்கிறது. இந்த சூழ்நிலையில் ஏர் இந்தியா-வை குத்தகைக்கு எடுக்க 35 கோடியை அரசு செலவிட்டுள்ளது. கிங்ஃபிஸ்ஷர் நிறுவனத்தில் அதிகளவிலான முதலீட்டை நான் செய்தேன். சீராக வளர்ச்சி பெற்று இந்தியாவின் சிறந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் என பல விருதுகளை பெற்றது. அதே சமயம், பொதுத்துறை வங்கியில் கிங்ஃபிஸ்ஷர் நிறுவனம் கடன் பெற்றது உண்மை தான். பணத்தை திரும்ப செலுத்த முன்வந்த என்மீது குற்ற வழக்குபதியப்பட்டது.
100 சதவிதம் பணம் திரும்பி செலுத்தப்படும் என் பலமுறை நான் கூறினேன்.ஆனால், ஊடகங்கள் இந்தியாவுக்கு நான் கடத்தப்படுவேனோ என்ற பயத்தில் பேசுவதாக கூறு செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தியாவில் சிறையில் இருந்தாலும் அல்லது லண்டனின் இருந்தாலும் பணத்தை திரும்பி செலுத்துவேன் " என்றார்.
மேலும், முன்னதாக தான் கொடுக்க முன் வந்த பணத்தை வங்கிகள் பெற்றுக்கொள்ளதது ஏன் என்று கேள்வி எழுப்பியவர், தலை சிறந்த ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிலைமை வருத்தம் அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.