தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'காங்கிரஸ், ஆம் ஆத்மி இரண்டும் ஊழல் கட்சிகள்' - பாஜக மூத்த தலைவர் குற்றச்சாட்டு! - ஆம் ஆத்மி

டெல்லி: 'காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இரண்டும் ஊழல் கட்சிகள்' என்று, முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

FG

By

Published : Mar 21, 2019, 4:54 PM IST

இது குறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான விஜய் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆட்சியில் செய்த ஊழல்களை வைத்து பெரிய பட்டியலையே தயாரிக்கலாம். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அதனை பாஜக ஒரு பொருட்டாக மதிக்காது.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்துதான் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். ஆனால் தற்போது காங்கிரஸ் உடனே அவர் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறது", என்று குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. டெல்லியில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக மே12ஆம் தேதி நடக்க உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details