தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தால் ஏரியை ரசிக்க நவீன முறையில் வியூ பாயிண்ட்!

காஷ்மீர்: தால் ஏரியை சுற்றுலாப் பயணிகள் ரசிக்க வசதியாக நவீன, பாரம்பரியமிக்க கட்டடக்கலை நயத்தில் வியூ பாயிண்ட் அமைக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுலாத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தால் ஏரி

By

Published : May 9, 2019, 10:26 AM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ளது புகழ்பெற்ற தால் ஏரி. இந்த ஏரி மிகவும் சுத்தமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏரியைக் காண ஆண்டுதோறும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். குளிர் காலத்தில் உறைந்து காணப்படும் இந்த ஏரி 'காஷ்மீரின் வைரக்கல்' என்று அழைக்கப்படுகிறது.

சுற்றுலாத்துறை இயக்குனர் என்.ஏ. வாணி

இப்படி பல புகழை கொண்டுள்ள இந்த ஏரியை வரும் சுற்றுலாப் பயணிகள் இதன் அழகைக் கண்டு ரசிக்கும் வகையில் நவீன, பாரம்பரிய கட்டடக் கலை நயத்தில் வியூ பாயிண்ட் அமைக்க அம்மாநில சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

இதற்காக தற்போது பணிகள் நடைபெற்று வருவதாக அம்மாநில சுற்றுலாத் துறை இயக்குநர் என்.ஏ. வாணி தெரிவித்துள்ளார்.

வியூ பாயிண்ட்

ABOUT THE AUTHOR

...view details