டெல்லி ரோஹினி சிறையிலிருந்து வெளிவந்த வீடியோ ஒன்றில் நூற்றுக்கணக்கான சிறை கைதிகள், கரோனா நோய் குறித்து தங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும் சிறை அலுவலர்களின் அக்கறையின்மையை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள இந்த வீடியோவில், சிறை எண் 10இல் உள்ள கைதிகள் சிறை அலுவலர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, கரோனா தொற்று நோயிலிருந்து தங்களை காப்பாற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.