இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கோமரோஸ் ஒன்றியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது கோமரோஸ் நாட்டின் மிக உயரிய விருதான ''தி கிரீன் கிரசண்ட் விருது'' அவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த விருதினை 130 கோடி இந்திய மக்களின் சார்பாக ஏற்றுக்கொள்கிறேன். இந்த விருது வழங்கி நான் கெளரவிக்கப்பட்டிருப்பது, இருநாடுகளின் உறவினைக் காட்டுகிறது. இருநாடுகளுக்கும் ஒரே பார்வைதான். அதுதான் நம்மை இணைக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய குடியரசு துணைத் தலைவரை கெளரவித்த கோமரோஸ்!
இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கோமரோஸ் நாட்டின் மிக உயரிய விருதான 'தி ஆர்டர் ஆஃப் தி கிரீன் கிரசண்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது.
வெங்கய்யா நாயுடு
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத்துறை, கலாசாரம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 6 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மேலும், குறுகிய கால வருகைகளுக்கும், துறைரீதியான பயணங்களுக்கும் விசா விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாமே: எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவா? - ஷாக் கொடுத்த ரயில்வே நிர்வாகம்!
Last Updated : Oct 13, 2019, 1:04 PM IST