தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய பெண் குழந்தைகள் தினம் - தலைவர்கள் வாழ்த்து! - தேசிய பெண் குழந்தைகள் தினம்

டெல்லி: கல்வி மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

தலைவர்கள்
தலைவர்கள்

By

Published : Jan 24, 2021, 10:12 PM IST

தேசிய பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல தலைவர்கள் இதனை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளிட்டுள்ளனர்.

இதுகுறித்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ட்விட்டர் பக்கத்தில், "கல்வி மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டு பாலின பாகுபாட்டை களைய வேண்டும் என பெற்றோரை கேட்டுக்கொள்கிறேன். சிறு வயதிலிருந்தே, பெண்களை மதிக்க வேண்டும் என ஆண்களுக்கு கற்பிக்க வேண்டும். மனநிலையில் மாற்றமே தற்போதைய தேவை. அப்போதுதான், நமது பெண்களின் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் உறுதி செய்ய முடியும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக்கொள்ளக் கூடாது. அம்மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

அமித் ஷாவின் ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடியின் அழைப்பில், 'மகளை காப்பாற்றுங்கள், மகளுக்கு கற்பியுங்கள்' என்ற பெயரில் பொதுமக்களிடையே பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, பள்ளிகளில் சிறுமிகள் சேர்வது அதிகரித்து முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு பாலின விகிதம் மேம்பட்டுள்ளது. தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, நம் நாட்டு பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த மீண்டும் உறுதி ஏற்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details