மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் இஸ்லாமியர்களுக்கு ஐந்து விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இது குறித்து மகாராஷ்டிரா சிறுபான்மை துறை அமைச்சர் நவாப் மாலிக் சட்டப்பேரவையில், "நீண்ட நாள்களாக கிடப்பில் இருக்கும் இந்தப் பிரச்னை குறித்து விரைவில் மசோதா தாக்கல் செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.
இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் மிலிந்த் பரண்டே கூறுகையில், "கல்வி நிறுவனங்களில் இஸ்லாமியர்களுக்கு ஐந்து விழுக்காடு இடஒதுக்கீட்டை சிவசேனா அரசு வழங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலர் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். இருப்பினும் இது போன்ற செய்திகள் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இஸ்லாமியர்களை கவரும் வகையில் ஆட்சியாளர்கள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஹிந்துக்கள் யாரும் விரும்பமாட்டார்கள்" என்றார்.