கேரளாவின் முதுபெரும் அரசியல் ஆளுமையும், கேரளா காங்கிரஸ்(எம்) தலைவருமான கே.எம்.மணி உடல்நலக்குறைவு காரணமாக பல நாட்களாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். இவருக்கு வயது 86 ஆகும்.
கேரளாவின் முதுபெரும் அரசியல் தலைவர் கே.எம்.மணி காலமானார் - KM Mani
திருவனந்தபுரம்: கேரளாவின் முதுபெரும் அரசியல் ஆளுமையும், கேரளா காங்கிரஸ் (எம்) தலைவருமான கே.எம்.மணி உடல்நலக்குறைவால் காலமானார்.
50 வருட அரசியல் வாழ்க்கையை கொண்ட கே.எம்.மணி, 1979ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து கேரளா காங்கிரஸ்(எம்) கட்சியை தொடங்கினார். கேரளா சட்டப்பேரவையில் 52 வருடங்களாக உறுப்பினராக இருந்த மணி, பலா சட்டமன்றத் தொகுதியை 13 முறை வென்றுள்ளார். மேலும், நான்கு முறை நிதியமைச்சராகவும், ஏழு முறை சட்டத்துறையமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
கிறிஸ்தவ சமூகத்து மக்களிடம் பெரும் செல்வாக்கை உடைய மணி, பல காலமாக காங்கிரஸ் தலைமை வகிக்கும் ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி 2016ஆம் ஆண்டு இந்த கூட்டணியிலிருந்து விலகி தனியாக செயல்பட்ட மணி, மீண்டும் 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார்.