ரயில், விமான சேவைகள் தொடங்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டுத்தொடர் நடத்துவது தொடர்பாக கடந்த சனிக்கிழமை குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களைத் தலைவருமான வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மக்களவை, மாநிலங்களவை பொதுச் செயலாளர்கள், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கூட்டுத்தொடர் நடைபெறுவதற்கு தகுந்த இடைவெளிகளுடன் போதிய அறைகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கும் அமைச்சர்கள், செயலர்கள், அலுவலர்கள் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்கும் பொருட்டே அமர வைக்கப்படுவர் எனவும், நாடாளுமன்றத்தில் உள்ள அறைகள் மற்றும் அதன் இணைப்புக் கட்டடங்களில் 24 துறைகளுக்கான நிலைக்குழுக் கூட்டம் நடைபெறும், மீதமுள்ள அறைகளில் மற்ற குழுக்கான கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.