வேலூர் மக்களவைத் தொகுதியில் ஆகஸ்ட 5இல் தேர்தல்!
2019-07-04 13:03:11
டெல்லி: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒரு மாதத்திற்கும் மேல் ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்ததையடுத்து, அந்த தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஏப்ரல் 16ஆம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்டு 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 11 ஆம் தேதி முதல் ஜூலை 18 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்புமனு மீதான பரிசீலனை ஜூலை 19 ஆம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப்பெற ஜூலை 22 ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலூர் தொகுதி முழுவதிலும் தற்போதிருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.