எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ், ராய்காட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை, மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், மாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நீதிபதிகள் எஸ்.எஸ். சிண்டே, மாதவ் ஜாம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவருக்கு சிகிச்சை தேவை எனத் தெரிவித்திருந்தது. இதற்கு, மாநில அரசு மறுப்பு தெரிவிக்க முடியுமா? தலோஜா சிறையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கிறோம் எனச் சொல்ல போகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இரண்டு வாரங்களுக்கு நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பிக்கிறோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.