தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சிலையைத் தொட்டால் கொரோனா பரவும்' - சிலைக்கு முகமூடியிட்ட பூசாரி! - covid 19 virus

லக்னோ: வாரணாசி கோயில் பூசாரி , கொரோனா வைரஸ் பரவுவதால் சிலைகளுக்கு முகமூடியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

சிலை
சிலை

By

Published : Mar 10, 2020, 9:40 AM IST

Updated : Mar 10, 2020, 10:09 AM IST

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்த விழுப்புணர்வுகளை அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன.

அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி கோயிலில் பணியாற்றும் பூசாரி ஒருவர் சுவாமி சிலைக்கு முகமூடியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவாமி சிலைக்கு முகமூடி போட்டுள்ளோம். இது குளிர் காலத்தில் சுவாமி சிலைக்கு உடை அணிவிப்பது, வெயில் காலத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது போன்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல் தான்" எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், "வைரஸ் பரவாமல் தடுக்க சிலைகளை மக்கள் தொடக்கூடாது என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் சிலையைத் தொட்டால், வைரஸ் வேகமாக பரவி அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது" என்றார். வட மாநிலங்களில் பக்தர்கள் சுவாமி சிலைகளை தொட்டு வழிபாடு செய்வது வாடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது

இக்கோவிலில் பூசாரியும், பக்தர்களும் முகமூடி அணிந்தப்படியே வழிபாட்டில் ஈடுபடுவதை காண முடிந்தது.

இதையும் படிங்க:கொரோனா அரக்கனை தீயிட்டு எரித்த மும்பை மக்கள்!

Last Updated : Mar 10, 2020, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details