காங்கிரஸில் 20 ஆண்டுகாலம் பணியாற்றிய முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் நேற்றைய முன்தினம், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, டாம் வடக்கன் ஒன்றும் காங்கிரஸில், அவ்வளவு பெரிய தலைவர் இல்லை என்று விளக்கமளித்தார்.