தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தடுப்பு மருந்துகள் எப்படிச் செயலாற்றுகின்றன? - editorial

ஹைதராபாத்: கரோனா வைரஸுக்கு (தீநுண்மி) எதிராகத் தடுப்பு மருந்துகள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்று பார்ப்போம்.

vaccines  coronavirus  COVID-19  pandemic  editorial  கரோனா தடுப்பு மருந்துகள், தடுப்பு மருந்துகள், வைரஸ் பாதிப்பு
vaccines coronavirus COVID-19 pandemic editorial கரோனா தடுப்பு மருந்துகள், தடுப்பு மருந்துகள், வைரஸ் பாதிப்பு

By

Published : May 11, 2020, 9:22 AM IST

கோவிட்-19 தொற்றுநோய்க்கு முடிவு கட்டுவதற்கான சிறந்த வழி, தடுப்பு மருந்தை உருவாக்குவதுதான். இத்தகைய தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு மரபு சார்ந்த, நவீன முறையிலான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

விஞ்ஞானிகள், பல்கலைக்கழகங்கள், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை, சார்ஸ்-கோவ்-2 லிருந்து மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காகப் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிவருகின்றன.

96 ஆராய்ச்சியாளர்கள், தடுப்பு மருந்து உருவாக்கும் ஆய்வின் தொடக்கக் கட்டத்தில் இருக்கிறார்கள். ஆறு நிறுவனங்கள், மருத்துவ ரீதியிலான சோதனையில் இறங்கிவிட்டன.

மற்ற சிலர், விலங்குகளிடம் சோதனை முயற்சியை மேற்கொண்டுவருகின்றனர். உயிர்க்காக்கும் இந்தத் தடுப்பு மருந்துகள் எவற்றால் உருவாக்கப்படுகின்றன, அவை எப்படிச் செயலாற்றுகின்றன?

உயிரி தீநுண்மி தடுப்பு மருந்துகளில் பலவீனமான (ஒடுக்கப்பட்ட) தீநுண்மி கிருமிகள் பயன்படுத்தப்படுகின்றன. தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, ரூபெல்லா தடுப்பு மருந்துகள் இவற்றுக்கு உதாரணங்கள் ஆகும். இருப்பினும், அவை மிக அதிகப்படியான பாதுகாப்புச் சோதனைகளுக்குள்படுத்தப்பட வேண்டும்.

நியூயார்க்கைச் சேர்ந்த கோட்ஜெனிக்ஸ் என்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனம், உயிரித் தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காகப் புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

செயல் முடக்கப்பட்ட ஒரு தீநுண்மி கிருமியானது, நுண்மத் தொகுதியில் வைத்து வளர்க்கப்படும்போது, நோய் உருவாக்கும் அதன் திறனை இழக்கிறது. இதுபோன்ற தீநுண்மிகளிலிருந்து உருவாக்கப்படும் தடுப்பு மருந்து, செயல் முடக்கப்பட்ட அல்லது கொலையுண்ட தடுப்பு மருந்து எனப்படுகிறது. மரபணு கட்டமைக்கப்பட்ட தடுப்பு மருந்து என மற்றொரு வகை தடுப்பு மருந்து உள்ளது.

இதில் கட்டமைக்கப்பட்ட ஆர்என்ஏ அல்லது டிஎன்ஏ பயன்படுத்தப்பட்டு, கூர்முனை (எஸ்) புரதங்களை நகலெடுக்குமாறு ஆணையிடப்படுகிறது. இதில் உள்ள குறைபாடு என்னவென்றால், மரபணு கட்டமைக்கப்பட்ட எந்தவொரு தடுப்பு மருந்தும், மனிதர்களுக்குப் பயன்படுத்துவதற்கான உரிமத்தைப் பெறவில்லை. இதுதவிர, 25 குழுக்கள், மருத்துவச் சோதனைக்கு முந்தைய நுண்மக்கடத்தி தடுப்பு மருந்துகளை உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வகை தடுப்பு மருந்தில், நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தூண்டுவதற்காக, வேதிப்பொருளின் மூலம் பலவீனப்படுத்தப்பட்ட தீநுண்மியைக் கொண்டு, நோய்க்கிருமியின் துகள்கள் கடத்தப்படுகின்றன. மேலும் 32 ஆய்வுக் குழுக்கள், எஸ் புரதத்தின் அடிப்படையிலான கரோனா தீநுண்மி தடுப்பு மருந்துகளுக்கான சோதனைகளை நடத்திவருகின்றன.

புதிய கரோனாவின் (என்கோவ்-இன்) கட்டுமான புரதங்களில் எஸ் புரதம்தான், ஆதார உயிரியின் நோயெதிர்ப்புத் திறனைச் செயலாற்றுவதற்குத் தூண்டும் முக்கிய நோய் எதிரணு பாகமாகும். ஆகையால், எஸ் புரதத்தை தடுப்பு மருந்து உருவாக்குதல், தீநுண்மிக்கு எதிரான வளர்ச்சிக்கான முக்கிய இலக்காக அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

அதேவேளையில், 5 இதர குழுக்கள், தீநுண்மி போன்ற நுண்துகள்களை (வி.எல்.பி.) கொண்டு தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். வி.எல்.பி. என்பவை பல்புரத கட்டமைப்பாகும். இவை இயற்கையான தீநுண்மிகளின் கட்டமைப்பையும் உறுதிப்பாட்டையும் ஒத்திருப்பதோடு, தீநுண்மிக்குரிய மரபுத்தொகுதி இல்லாமல் இருப்பதால், இவை மலிவான, பாதுகாப்பான தெரிவாக உள்ளன.

வீரியமிழந்த நச்சுப்பொருள் தடுப்பு மருந்தானது ஃபார்மால்டிஹைடு, தண்ணீர் கலவையைக் கொண்டு, நோய்க்கிருமிகளில் உள்ள சில நச்சுப்பொருள்களைச் செயலிழக்கச் செய்வதால் தயாரிக்கப்படுகிறது. வீரியமிழந்த இந்த நச்சுப்பொருள்களைப் பின்னர் உடலில் ஊசி மூலம் செலுத்தலாம். இதுபோன்ற 8 வீரியமிழந்த நச்சுப்பொருள் தடுப்பு மருந்துகள், மருத்துவச் சோதனைகளுக்காகக் காத்திருக்கின்றன.

சார்ஸ்-கோவ்-2 ஆனது கூர்முனை (எஸ்) புரதங்களை அதனுடைய சவ்வுகளில் கொண்டுள்ளது. இந்த எஸ் புரதங்கள், நமது சளிச் சவ்வில் உள்ள ஏஸ் 2 உணர்வுப்பொறிகளை அடைப்பதன் மூலம் நமது மூச்சு வழித்தடங்களில் புகுந்துவிடுகின்றன. நோய் தாக்கப்படுபவரின் செல்களோடு ஒருமுறை இந்தத் தீநுண்மி ஒட்டிக்கொண்டவுடன், அந்தச் செல்களுக்குள் தனது மரபணுப் பொருளை (ஆர்என்ஏ) செலுத்தி, பல்கிப் பெருகச் செய்கிறது.

நமது நோயெதிர்ப்புக் கட்டமைப்புக்கு, நோய்க்கிருமிகளை (பாக்டீரியா, தீநுண்மி போன்றவை) அறிந்துகொள்வதற்கும், அவற்றோடு சண்டையிடுவதற்கும் பயிற்சி அளிப்பதுதான், எந்தவொரு தடுப்பு மருந்தின் இலக்கு ஆகும். இதனைச் செய்வதற்கு, தீநுண்மியில் உள்ள குறிப்பிட்ட மூலக்கூறுகள் (எதிரணுக்கள் எனப்படுபவை) நோயெதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதற்காக உடலுக்குள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

நோய்எதிர்ப்புக் கட்டமைப்பானது ஒருமுறை இந்த எதிரணுக்களை அறிந்துகொண்டுவிட்டால், இந்தத் தீநுண்மியின் செல் சவ்வுகளில் சிறப்புப் புரதங்களை எதிர்மங்கள் ஒட்டிவிடும், அதன்மூலம் டி செல்கள் இவற்றை அழிக்க முடியும். உதவியாளரான டி செல்கள், உட்செலுத்தப்பட்ட எதிரணுக்களை அழிப்பதற்காக, எதிர்மங்களையும் பேருண்ணிகளையும் பிரிப்பதற்கு பி செல்களைச் செயல்படவைக்கின்றன. இவை ஆதார உயிரியின் நோயுற்ற செல்களைக் கொல்வதற்காக சைட்டோடாக்ஸிக் டி செல்களைச் செயல்படவைப்பதற்கும் உதவுகின்றன.

டி, பி செல்கள் நினைவுச் செல்களை உருவாக்குகின்றன. அவை அதே மாதிரியான நோய்க்கிருமியை (இந்த இடத்தில் தீநுண்மி) நினைவில் வைத்துக்கொள்கின்றன. அதே மாதிரியான தீநுண்மி மீண்டும் தென்பட்டால், நோய் எதிர்ப்புக் கட்டமைப்பானது உடனடியாக எதிரணுக்களைத் தெரிந்துகொண்டுவிடும், ஆகையால் அந்தத் தீநுண்மி உடலுக்குள் பரவுவதற்கு மிக முன்பாகவே அவற்றைக் கடுமையாகத் தாக்கும்.

இதையும் படிங்க: இத்தாலியில் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிப்பு?

ABOUT THE AUTHOR

...view details