நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்றும், நாளையும் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு குடியரசு துணை தலைவர், பிரதமர் ஆகியோர் தனது வாழ்த்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "சோதனை காலத்தில் இம்மாதிரியான திருவிழாக்கள் நம் மனதில் புத்துயிர் அளித்து வாழ்க்கையின் திசையில் வழிக்காட்டியாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.