கரோனா நோயாளிகள் பயன்படுத்தும் சிகிச்சை அறை மற்றும் பிற பொருள்கள் ரசாயன கலவைகள் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வைரஸ் பரவலுக்கு எதிராக போராடுவதற்கு இது மட்டுமே போதாது என விஞ்ஞானிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, புற ஊதாக் கதிர்களை கிருமி நாசினியாக பயன்படுத்தும் நகரும் ட்ராலிகளை (தள்ளுவண்டி இயந்திரங்கள்) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் மெக்கின்சி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உடன் இணைந்து, ARCI எனப்படும் இன்டர்நேஷனல் மெட்டாலர்ஜி மற்றும் நியூ மெட்டீரியல் ஆராய்ச்சி மையம் வடிவமைத்துள்ளது.
1.6 மீட்டர் உயரமும், 0.6 மீட்டர் அகலமும் கொண்ட இந்த டிராலியைக் கொண்டு கரோனா நோயாளிகளின் அறையை எளிதில் சுத்தம் செய்யலாம்.