தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தும் பாஜக எம்எல்ஏ ! - டேராடூன் செய்திகள்

டேராடூன் : பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் மீது பொய் வழக்கு தொடுக்குமாறு காவல்துறை அலுவலரை பாஜக எம்எல்ஏ மிரட்டிய ஒலிப் பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தும் பாஜக எம்.எல்.ஏ !
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தும் பாஜக எம்.எல்.ஏ !

By

Published : Sep 11, 2020, 8:44 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மகேஷ் நேகி, தன்னை இரண்டு ஆண்டுகள் கட்டாயப்படுத்தி பல்வேறு இடங்களுக்கு மிரட்டி அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்ததாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் அண்மையில் புகாரளித்தார். முதலில், அந்த பெண்ணின் புகார் ஏற்கப்படாமல் அலைகழிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து போராடிய அவர், தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து வழக்குப் பதிய வைத்ததாக அறியமுடிகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வரும் ஹரித்வார் காவல்துறை அலுவலர் ஒருவருக்கு குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ அலைப்பேசியில் அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். அதில், பாதிக்கப்பட்டவருக்கு எதிராக அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் அளிக்குமாறு அச்சுறுத்தியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த டேராடூன் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அருண் மோகன் ஜோஷி, "இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். அந்த பெண் அளித்த உண்மையான வாக்குமூலமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அச்சுறுத்தலுக்கு உள்ளான காவல்துறையினரால் பதியப்பட்ட போலியான அறிக்கை இணைக்கப்படாது. அதேபோல, வழக்கு தொடர்பாக வரும் அனைத்து ஆதாரங்களும் இந்த வழக்கில் முழுமையாக விசாரிக்கப்படும்" என்றார்.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாஜக எம்.எல்.ஏ மகேஷ் நேகி கூறுகையில், "இந்த குற்றச்சாட்டுகளை பொய்யானவை. எனது அரசியல் வாழ்வை சீர்குலைக்க செய்யப்பட்ட சதி. இட்டுக்கட்டப்பட்டவை" என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பாஜகவின் அம்மாநில பொதுச் செயலாளர் சஞ்சய் குமார், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணிபுரிந்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்த தகவல் வெளியாகியது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details