உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அப்பகுதி முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதையடுத்து பெரும் பாதிப்புகளை சந்தித்த டிகோச்சி பகுதியில் மீட்பு பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்தானது.
மீட்பு பணிக்கு சென்ற விமானம் விபத்து! - விபத்து
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்பு பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது, அதில் பயணித்த இருவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
helicopter
இந்நிலையில் ஹெலிகாப்டரில் பயணித்த விமானியும், துணை விமானியும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, 21ஆம் தேதி இதேபோல் மீட்பு பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்தானதில் மூன்று பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.