உத்தரப் பிரதேசம் கோண்டா மாவட்டம் சரையா கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் சுக்லா. தீவிர குடிப்பழக்கமுள்ள இவர் மது வாங்க அவருடைய தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், சஞ்சயின் தாய் பணம் கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் தன் தாயை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். இது குறித்து சஞ்சயின் பாட்டி ஷஷாங் சுக்லா பாராஸ்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, காவல் துறையினர் சஞ்சயைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.