உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் வசித்து வருபவர் உதய் பிரகாஷ் சுக்லா(25). இவருக்கு ஐந்து சகோதரர்கள் உள்ளனர். இந்நிலையில், உறங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவரின் தலையை வெட்டி சுக்லா கொன்றுள்ளார். இதையடுத்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் சுக்லாவை கைது செய்தனர்.
விரைவில் திருமணம் நடைபெற வேண்டி முதியவரின் தலையை வெட்டியவர் கைது - திருமணம் நடைபெற முதியவரின் தலையை வெட்டிய நபர்
கோண்டா: உத்தரப் பிரதேசத்தில் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக 60 வயது முதியவரின் தலையை வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், "சுக்லாவும் அவரது ஐந்து சகோதரர்களும் திருமணமாகாதவர்கள். கடந்த வாரம் பாதிரியார் ஒருவர் அவர்களை சந்தித்து, வயதான ஒருவரை தூக்கத்தில் தலை துண்டித்துவிட்டால், அவர்களது திருமணங்கள் விரைவில் நடைபெறும் என்று கூறியிருந்தார். இதனால் பாதிரியார் கூறியதை நிறைவேற்றுவதற்காக இந்த கொலையை செய்திருக்க வேண்டும்" என்று கூறினர்.
இது குறித்து எஸ்.எச்.ஓ, (SHO) கர்னல் கஞ்ச் ராஜ்நாத் சிங் கூறும்போது, "குற்றஞ்சாட்டப்பட்ட உதய் பிரகாஷ் சுக்லா (25) பாதிக்கப்பட்ட பாபுராம் குடும்பத்தினருடன் எந்தவிதமான தகராறும், சண்டையும் இல்லை. இந்த நடவடிக்கையை எடுக்க அவரைத் தூண்டியது என்ன என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதம் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆதாரமாக வழங்கப்படும்"என்றார்.