கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் அத்தியாவசியத் தேவைகளுக்கே திண்டாடி வருகின்றனர். அதேபோல், வேறு மாநிலத்திற்கு வேலைக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
இதனிடையே வேறு மாநிலங்களுக்குச் சென்று படித்து வரும் மாணவர்கள், ஊரடங்கு உத்தரவால் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில மாணவர்களை மீட்க, அம்மாநில அரசு சார்பாக பிரத்யேக இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவட்ட கவுதம் புத்தாநகர் நீதிபதி சுகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், '' நொய்டா உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள மாணவர்களுக்காக அரசு சார்பில், பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்திற்குள் சென்று, அனைத்து தகவல்களையும் சரியாகப் பதிவிட்ட சில மணி நேரங்களில் அரசு சார்பாக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள் '' எனப் பதிவிட்டுள்ளார்.
அந்த தளத்தில் மாணவர்களின் பெயர், முகவரி, குடும்பத்தினர் விவரம், படிக்கும் கல்லூரி, பல்கலைக்கழகம், மாநிலத்தின் பல்வேறு தகவல்கள் எனக் கேட்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தகவல்களைக் கொடுத்த பின்னர், அடையாள அட்டையும், மருத்துவ பரிசோதனைச் சான்றிதழும் கேட்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கால் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம்: புலம்பும் மெக்கானிக்குகள்