நாட்டின் சுற்றுலா நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
கடந்த ஒராண்டில் மட்டும் சுமார் 53.6 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர். இதையடுத்து நாட்டின் மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 23.1 விழுக்காடு பங்கை உ.பி தன்னகத்தே கொண்டுள்ளது. உத்தரப் பிரேதச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின், அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே மாநில சுற்றுலாத் துறை, நாட்டிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக அம்மாநில முதன்மைச் செயலர் முகேஷ் மேஷ்ராம் தெரிவித்துள்ளார்.