தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவுக்கு துப்பாக்கிகளை வழங்கும் அமெரிக்க கப்பற்படை - இந்திய போர்க் கப்பல்கள்

இந்திய போர் கப்பல்களை தயார் செய்யும் வகையில், அமெரிக்க கப்பற்படை தான் தயாரித்துள்ள காலிபர் துப்பாக்கிகளை இந்திய கப்பற்படைக்கு வழங்கவுள்ளது.

இந்திய கப்பற்படை
இந்திய கப்பற்படை

By

Published : Jan 6, 2021, 6:31 PM IST

டெல்லி:இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படாத நிலையில், இந்திய கப்பற்படைக்கு, அமெரிக்க கப்பற்படை மூன்று 127 மில்லி மீட்டர் காலிபர் துப்பாக்கிகளை வழங்கவுள்ளது. இந்திய போர் கப்பல்களை தயார் நிலையில் வைக்கும் பொருட்டு, 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் கீழ் இந்த துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளன.

முன்னதாக, 127 மில்லி மீட்டருடைய 11 காலிபர் துப்பாக்கிகளை வழங்கக்கோரி அமெரிக்க அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியது. இதனையடுத்து முதல்கட்டமாக மூன்று துப்பாக்கிகள் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.

அமெரிக்காவில் புதிய துப்பாக்கிகளின் உற்பத்தித் தொடங்கியதும், ஒப்பந்தத்தின்படி மீதமுள்ள துப்பாக்கிகளும் வழங்கப்படவுள்ளன. தற்போது இந்திய போர்க்கப்பலில் உள்ள பழைய அமெரிக்க கப்பற்படை துப்பாக்கிகள் நீக்கப்பட்டு, புது துப்பாக்கிகள் சேர்க்கப்படும். இதன் மூலம் இந்தியா -அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவு மேலும் வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டெல்லியில் வெளுத்து வாங்கும் ஆலங்கட்டி மழை

ABOUT THE AUTHOR

...view details