தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விண்வெளி தொழில்நுட்பத்தை பாதுகாக்கும் ஒப்பந்தம்! அமெரிக்கா-பிரேசில் இடையே கையெழுத்து!

வாஷிங்டன்: விண்வெளி தொழில்நுட்பத்தை பாதுகாக்கும் வகையில் தென் அமெரிக்கா நாடான பிரேசில்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

விண்வெளி தொழில்நுட்பத்தை பாதுகாக்கும் ஒப்பந்தம்

By

Published : Mar 20, 2019, 11:42 AM IST


விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருக்கும் அமெரிக்கா பல்வேறு திட்டங்களை வகுத்துவருகிறது. மேலும், செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சியிலும் அந்நாடு முதலிடத்தில் தொடர்ந்துநீடிக்கிறது.

இந்நிலையில், விண்வெளி தொழில்நுட்பத்தைப் பாதுகாக்கும் வகையில் அண்டை நாடான பிரேசிலுடன் முக்கிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பாதுகாப்பிற்கான அமெரிக்க உதவி செயலாளர் கிறிஸ்டோபர் பார்டு மற்றும் பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சர் எர்னஸ்டோ அரூஜோ தொழில்நுட்பப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் சார்பற்ற கொள்கை அடிப்படையில் தொழில்நுட்பத்தை முறையான வகையில் கையாளுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அரசுமுறை பயணமாக வாஷிங்டன் வந்துள்ள பிரேசில் அதிபர் ஜயீர் போல்சோனாரோ, பயணத்தின் ஒரு பகுதியாக வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் தலைமையகத்தைப் பார்வையிட்டார்.

மேலும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து வெனிசூலா விவகாரம் உள்பட பல முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனையிலும் ஜயீர் போல்சோனாரோ ஈடுபட உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details