உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் நான்கு வயது பெண் குழந்தையை அதன் உறவினர் ஒருவர் வன்புணர்வு செய்துள்ளார். ஜாகிர் நகர் பகுதியைச் சேர்ந்த அப்பெண் குழந்தையை, 10 ரூபாய் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.
4 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த உறவினர் - uttar pradesh
அலிகார்: நான்கு வயது பெண் குழந்தை வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
accused
வன்புணர்வு செய்த பின்னர், விளையாடும்போது அடிபட்டு விட்டதாக பெற்றோர்களிடம் கூறும்படி அக்குழந்தையிடம் கூறியுள்ளார். குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர்கள், காவல் நிலையத்தை நாடியுள்ளனர். குற்றம் சுமத்தப்பட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.