உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி அக்டோபர் 18ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளான அஷ்பக், மொயினுதீன் ஆகியோரின் புகைப்படங்களை காவல் துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த இரண்டு குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தருவோருக்கு ரூ. 2.5 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாகவும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்தக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சையத் அசிம் அலியை நாக்பூரில் உள்ள நீதிமன்றத்தில் காவல் துறையினர் இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்.
இதையும் படிங்க :என்சிபி மூத்த தலைவரிடம் அமலாக்கத்துறை 12 மணி நேரம் விசாரணை