நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோசி மக்களவைத் தொகுதியில் அதுல் ராய் போட்டியிட்டார். அப்போது மாணவி ஒருவர் அளித்தப் புகரின் அடிப்படையில் அதுல் ராய் மீது பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. இதனால் திடீரென்று பரப்புரைக்கிடையே தலைமறைவானார்.
உத்தரப் பிரதேச எம்.பி.க்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் - bajugun samaj
லக்னோ: பாலியில் வன்புணர்வு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அதுல் ராயை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இது அரசியல் பழிவாங்கல் என்றும் தொண்டர்கள் ராய்க்கு தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கோசியில் ராய் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றிபெற்றார். ஆனாலும் நாடாளுமன்றத்திற்கு பதவி ஏற்க அவர் வரவில்லை.
மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.க்கள் நாடாளுமன்ற செயல்படும் 60 நாட்களுக்குள் பதவி ஏற்க வேண்டும். இந்நிலையில் வாரணாசி நீதிமன்றத்தில் சரணடைந்த அதுல் ராயை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.