தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கு உத்தரவு - மனைவியைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் கணவன் தற்கொலை!

லக்னோ: ஊரடங்கு உத்தரவால் மனைவியைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்த நபர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ே

By

Published : Apr 10, 2020, 12:08 PM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரும் நபர்களைப் பிடித்து காவல்துறையினர் கண்டித்துவருகின்றனர்.

அந்தவகையில், உத்தரப் பிரதேசம் ராதா குண்ட் பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ் சோனி (32). இவரின் மனைவி, தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தநேரத்தில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது.

மனைவியைப் பார்க்காத விரக்தியில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ராகேஷ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:ஒடிசாவில் ஊரடங்கு நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details