உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள உட்வத் நகர் கிராமத்தில் சரியாக சாலை போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் தவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கிராமத்திற்கு விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் கோவிந்த் தார் துபே, சாலை வசதி இல்லாததால் தண்ணீர் நிரம்பிய வயல்கள் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் கிராமத்து இளைஞர்கள் அவரை கட்டிலில் படுக்க வைத்தப்படியே நீர் நிரம்பிய வயல்கள் வழியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுமார் ஒன்றரை கிமீ தூரம் முதியவரை தூக்கி சென்ற இளைஞர்கள், மீண்டும் சிகிச்சை முடிந்தபிறகு அதே கட்டிலில் வைத்தப்படியே தூக்கி வந்துள்ளனர். இதைத் தனது செல்போனில் படம்பிடித்த கோவிந்த, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.