தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மதமாற்றம் தடுப்பு சட்டம்: பரேலி காவல் துறையின் முதல் வழக்குப்பதிவு!

லக்னோ: உபியில் புதிதாக அமலுக்கு வந்த மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், பரேலி காவல் துறையினர் முதல் வழக்கை பதிவு செய்துள்ளனர்.

லக்னோ
லக்னோ

By

Published : Dec 3, 2020, 6:06 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் மற்றும் திருமணத்திற்காக மதமாற்றம் செய்வது சட்டவிரோத செயல் எனவும், அவற்றைத் தடுக்க கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டமும் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பரேலி மாவட்டத்தில் முதல் வழக்கு இன்று பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து பேசிய கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் (கிராமப்புற) சன்சார் சிங், " கடந்த ஞாயிற்றுக்கிழமை உவைஷ் அகமத்(22) மீது காவல் துறையினர் கட்டாய மதமாற்ற வழக்கை பதிவு செய்துள்ளனர். அவர் 20 வயதான இளம்பெண்ணை, மதமாற்றம் செய்ய வற்புறுத்தியது மட்டுமின்றி கடத்திவிடுவேன் என மிரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அகமத், காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தலைமறைவாக இருந்துள்ளார். ஆனால், அத்தகைய செயலில் காவல் துறையினர் எப்போதும் ஈடுபடமாட்டார்கள். அவரை பிடித்திட மட்டுமே பல தனிப்படைகள் அமைத்திருந்தோம். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்

கிடைத்த தகவலின்படி, அகமத் மற்றும் அந்தப் பெண் பள்ளி நண்பர்கள் ஆவர். கடந்தாண்டு, பெண்ணின் குடும்பத்தினர், தங்கள் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகே, அப்பெண் ஆண் நண்பருடன் வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது.

இருவரும் மும்பை செல்கையில், பாதி வழியிலே பெண்ணின் குடும்பத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, சில மாதங்களுக்கு பிறகு, அப்பெண்ணிற்கு வேறு நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், அப்பெண்ணிற்கு தொடர்ச்சியாக அகமத் தொந்தரவு கொடுத்து வருவதாக, அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details