தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலருக்காக 71 ஆடுகளை இழந்த பெண்! - 71 goat

லக்னோ: சீமா என்பவர் தனது கணவருடன் வாழ மறுத்துவிட்டு காதலருடன் சேர்ந்து வாழ்வதற்காக 71 ஆடுகளை நஷ்ட ஈடாக கொடுத்துள்ளார்.

71 goats

By

Published : Aug 19, 2019, 9:33 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் வசிப்பவர் சீமா. இவருக்குத் திருமணமாகி அவரது கணவர் ராஜேஷூடன் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் அவரது கணவருடன் வாழப் பிடிக்காமல், தற்போது அதே ஊரில் வசிக்கும் உமேஷ் என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சீமாவின் கணவரது வீட்டில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து சீமாவின் காதலர் உமேஷ் வளர்த்து வரும் 142 ஆடுகளில் பாதி, அதாவது 71 ஆடுகளை ராஜேஷூக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அவ்வூர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர். பின்னர் பஞ்சாயத்தில் சீமா, காதலர் உமேஷ், ஊர்க்காரர்கள் முன்னிலையில் 71 ஆடுகளை கணவர் ராஜேஷூக்கு இழப்பீடாக தந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details