உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் வழக்கறிஞர், சிறுமியின் அத்தைகள் ஆகியோர் காரில் சென்றுகொண்டிருந்தபோது சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானார்கள். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் இரண்டு அத்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் இந்த பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரின் வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உன்னாவ் வழக்கில் திருப்பம்! - உன்னாவ் பாலியல் வழக்கு
லக்னோ: உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு பரிந்துரைத்துள்ளது.
உன்னாவ்
இது விபத்தல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டு சதி என்ற கோணத்தில் விசாரித்த உத்தரப் பிரதேச அரசு, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே, பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இதனையும் சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்ற உத்தரப் பிரதேச அரசு, விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்துள்ளது.