உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹத்ராஸ் மாவட்டம், ஹசாயன் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரபால் சிங். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர் வசிக்கும் பகுதியில் குடிநீர் உவர்ப்பாக இருக்கிறது என பலமுறை அரசு அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தண்ணீர் இல்லை - தற்கொலை செய்ய அனுமதி கோரி பிரதமருக்கு கடிதம்.. - write letter
லக்னோ: குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் இல்லாததால் வெறுப்படைந்த விவசாயி தனது மூன்று மகள்களுடன் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கோரி பிரமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ”எங்கள் பகுதியில் குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. என்னால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட எனது மகள்களுக்கு கொடுக்கமுடியவில்லை. எங்கள் பகுதியில் கிடைக்கும் தண்ணீரும் அதிக உவர்ப்புடன வருவதால் குடிப்பதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. எனது மகள்களுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலையில், நானும், எனது மகள்களும் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கூறுகையில், ’எங்கள் பகுதியில் உள்ள தண்ணீரை குடிக்க முடியவில்லை. மிகவும் உவர்ப்பாக உள்ளது. கால்நடைகள், மிருகங்கள்கூட இந்த நீரை குடிக்க மறுக்கின்றன. ஒருகுடம் தண்ணீருக்காக நாங்கள் பல கிலோமீட்டர் தூரம் வரை நடக்கிறோம்’ என்றார்.