பிரஷாந்த் ஜகதீஷ் கனோஜியா என்ற ஊடகவியலாளர் இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை தவறாக சித்தரித்து தனது வலைதள பக்கங்களில் விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
யோகி ஆதித்யநாத்தை அவமதித்த ஊடகவியலாளர் கைது! - lucknow
லக்னோ: உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியனாத்தை அவமதிக்கும் வகையில் தனது வலைதள பக்கங்களில் பதிவிட்ட ஊடகவியலாளரை லக்னோ காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து ஹசரத்கஞ்ச்(Hazratganj) பகுதி காவல் உதவி ஆய்வாளர் அசோக் குப்தா அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தார். அதில், "உத்தரப் பிரதேச முதலமைச்சருக்கு கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் காதல் கடிதம் எழுதியுள்ளதாகவும், அவருடன் வாழ்நாள் முழுவதும் வாழ ஆசைப்படுவதாகவும் பத்திரகையாளர்கள் முன்பு கூறியிருந்தார். அந்த விடியோ காட்சியை பிரஷாந்த் ஜகதீஷ் கனோஜியா என்பவர் அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த ஊடகவியலாளரை அவரது இல்லத்தில் இன்று லக்னோ காவல் துறையினர் கைது செய்தனர். இவர் ஐ.ஐ.எம்.சி-இன் முன்னாள் மாணவர் என்றும், பல்வேறு ஊடகங்களில் அவர் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவ்வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணைகளை லக்னோ காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.