தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பார் கவுன்சில் தலைவர் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொலை - UP

லக்னோ: உத்தரப் பிரதேச பார்கவுன்சில் தலைவர் நீதிமன்ற வளாகத்திலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்கவுன்சில் தலைவர்

By

Published : Jun 13, 2019, 9:12 AM IST

டெல்லி ஆக்ரா நீதிமன்ற வளாகம் சம்பவத்தன்று எப்போதும்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது, உத்தரப் பிரதேச பார் கவுன்சில் தலைவர் தர்வேஷ் யாதவை அவருடன் பணிபுரியும் சக ஊழியரான மணிஷ் சர்மா துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, தர்வேஷ் யாதவ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் மணிஷ் சர்மாவை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து காவல் துறையினர், ‘மூத்த வழக்கறிஞர் அரவிந்த் மிஷ்ராவின் அறையில் மணிஷ் சர்மாவிற்கும் பார்கவுன்சில் தலைவர் தர்வேஷ் யாதவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த மணிஷ் சர்மா தனது கைத்துப்பாக்கியை எடுத்து தர்வேஷ் யாதவை சுட்டுக் கொன்றார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் தர்வேஷ் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற வளாகத்திலேயே பார் கவுன்சில் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details