உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் குற்றச்செயல்களுக்குப் பணத்தை பரிமாற்றம் செய்து வந்த இரண்டு சீனர்களை, உபி பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் போச்ன்லி தெங்லி (Pochnli Tengli), சூ ஸுன்ஃபூ (Xu Xunfu) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
'பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ரகசிய பணப் பரிமாற்றம்' இரண்டு சீனர்கள் கைது! - பொய்யான ஆவணங்கள் மூலம் வங்கி கணக்கு
லக்னோ: நொய்டாவில் பணம் பரிமாற்றம் வழக்கில் பெண் உட்பட இரண்டு சீனர்களை, பயங்கரவாதத் தடுப்புப் படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இவர்கள் பொய்யான ஆவணங்கள் மூலம் வங்கி கணக்கை தொடங்கி, குற்றச் செயல்களுக்குப் பணத்தை உபயோகித்து வந்துள்ளனர். தற்போது இருவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, உபி காவல் துறை சார்பில் இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ், ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் ஆதாரங்கள் அடிப்படையில் இருவரும் கைதாகியுள்ளனர்.
ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது தப்பியோடியவர்களுக்குச் சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிப்பதாகும். இன்டர்போல் அண்டை நாடுகளிடம் கைது செய்ய கோருகிறது. அதே போல், ப்ளூ கார்னர் நோட்டீஸ் என்பது விசாரணை அறிவிப்பாகும்.