பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இந்தச் சமூகத்தில் சாதியை ஒழிப்பதற்காகப் போராடியுள்ளனர். தற்போது 21ஆம் நூற்றாண்டு நடந்துவரும் நிலையிலும், அறிவியல் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்த போதிலும் இந்தச் சாதி ஒழிந்தபாடில்லை.
இந்தகாலத்திலும் சில பழமையான கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாதியை ஒரு அடையாளமாகப் பின்பற்றி வருகிறார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரு அருகில் இருக்கும் மாவட்டமான ராமநகரா பகுதியில் தீண்டாமை இன்றளவும் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் ராமநகரா மாவட்ட நஞ்சபுரா எனும் கிராமத்தில் இருக்கும் முடி திருத்தும் கடைகளில் பட்டியலின மக்களுக்கு அனுமதி கிடையாது. இது தெரியாமல், சில பட்டியலின மக்கள் கடைகளுக்குச் சென்றால், அக்கடையை மூடிவிட்டுச் செல்கின்றனர், கடை உரிமையாளர்கள்.