சீன நாடு என்னதான் பாதுகாப்புப் படையில் சிறந்து விளங்கக் கூடியது என்று கூறிக் கொண்டாலும், அவர்கள் நடத்தும் தாக்குதல் போர் திறமையற்று வெளிப்படுகிறது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் சோ ஏரி ஆகிய இடங்களில் சீனா அதன் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 ஆயிரம் பேரைக் குவித்துள்ளது.
இதனால் கடந்த மே 5ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதியில், சுமார் 250 இந்திய - சீனா பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், இருதரப்பினரும் இரும்புக் கம்பிகள், கற்கள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர். அதில் இருதரப்பில் இருந்தும் நூறு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வடக்கு சிக்கிமில் இதேபோன்று இந்திய - சீனாவின் பாதுகாப்புப் படையினர் மோதிக்கொண்டனர்.
சீனாவிடம் துப்பாக்கி உள்ளிட்ட போர் ஆயுதங்கள் இருந்தும்; பல சந்தர்ப்பங்களில் அதைப் பயன்படுத்தாமல் இரும்புக்கம்பிகள், இரும்பு வேலிக்கற்கள், கம்புகளைக் கொண்டு தாக்கி, ராணுவ வீரர்கள் போர் புரியும் முறையில் இருந்து, தவறி இந்திய வீரர்களுடன் சண்டையில் ஈடுபட்டு வருகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடன் பாகிஸ்தான் நடத்தும் முறையற்ற தாக்குதல்போல் இருப்பதாக, சமீபத்திய சீனத்தாக்குதலை இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கருதுகின்றனர்.
இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கிலிருந்து அருணாச்சலப்பிரதேசம் வரை, சீனா - இந்தியா ஒன்றோடு ஒன்று பலப்பரீட்சை நடத்திவருகிறது. கடந்த 1967ஆம் ஆண்டில் இருந்து இந்திய - சீன நாடுகள் அப்பகுதியில் தாக்குதல் நடத்தாமல், அமைதி காத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய எல்லையில் நேபாளத் தொழிலாளர்கள் போராட்டம்!