2017ஆம் ஆண்டு தனக்கு 17 வயதாக இருந்தபோது முன்னாள் பாஜக சட்டபேரவை உறுப்பினரான குல்தீப் சிங் செங்கார், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமி ஒருவர் புகாரளித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
சிபிஐ தனது தரப்பு வாதங்களை திங்கள்கிழமையுடன் முடித்துக்கொண்டது. பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் வரும் 16ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.