தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி - பியூஷ் கோயல் - அபிஜித் பானர்ஜி குறித்து பியூஷ் கோயல்

டெல்லி: பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்றுள்ள அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Piyush Goyal

By

Published : Oct 18, 2019, 7:26 PM IST

இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஐந்து கோடி குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதிசெய்யும் 'நியாய்' திட்டம் குறித்து அவரிடம் ஆலோசனை பெறப்பட்டதாக, காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "நோபல் பரிசு வென்றுள்ள அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர், இடதுசாரி கொள்கையை உடையவர் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் அறிமுகம் செய்த நியாய் திட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால், மக்கள் அவரின் கொள்கையை நிராகரித்துள்ளனர்" என்றார். பொருளாதாரம் சீராக இல்லை, தற்போதைய சூழ்நிலையில் இந்திய பொருளாதாரம் மீண்டெழுவதற்கு வாய்ப்பில்லை என அபிஜித் பானர்ஜி தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details