மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் கைலாஷ் சௌத்ரிக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”கரோனா அறிகுறிகள் என்னிடம் தென்பட்டவுடன் கோவிட்-19 பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக் கொண்டேன். பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, விரைவில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு லேசனா காய்ச்சல், சுவாச சிக்கல் ஆகியவை உள்ள நிலையில் மருத்துவர்கள் தன்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்வதாகவும், தன்னைப் பற்றி கவலைக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.