தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவிமயமான ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் - பாஜக அமைச்சர் செங்கொடியினரால் தாக்கப்பட்ட பின்னணி? - sfi

மேற்கு வங்கம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ தாக்கப்பட்ட பிரச்னையின் பின்னணி...

babul supriyo news

By

Published : Sep 20, 2019, 7:38 PM IST

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றுக்கு தலைமை தாங்க மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ நேற்று வருகை தந்தார். இதற்கு இடதுசாரி அமைப்புகளான எஸ்.எப்.ஐ (SFI), அனைத்து இந்திய மாணவர்கள் அமைப்பு (AISA) ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன.

ABVP Saffron flag in Jadavpur University

பாபுல் சுப்ரியோ வருகையையொட்டி பல்கலைக்கழகம் முழுவதும் காவிக் கொடியை கட்டி அட்டகாசம் செய்திருக்கிறார்கள் ஏபிவிபி அமைப்பினர். இந்த காரணத்தால்தான் இடதுசாரி மாணவர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி உள்ளிட்டோரின் புகைப்படங்களை வைத்து பாபுல் சுப்ரியோ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பாபு சுப்ரியோ அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ். விழாவுக்கு வருகை புரிந்திருக்கிறார்.

AISA, SFI protest

இந்த நிலையில், கல்லூரிக்கு வந்த பாபு சுப்ரியோவை இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி வேறு வகையிலும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Babul supriyo attack

ஆர்.எஸ்.எஸ். விழாவுக்கு வருகை புரிந்த பாபு சுப்ரியோவுக்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது முன்பே தெரியும் என்கிறது மற்றொரு தரப்பு. அதையும் மீறி அவர் உள்ளே வந்திருக்கிறார். விழாவில் கலந்துகொண்ட பாபுல் சுப்ரியோவுக்கு எதிராக இடதுசாரி மாணவர்கள் முழக்கம் எழுப்பியிருக்கின்றனர். விழா முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சுப்ரியோவுக்கும், இடதுசாரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆத்திரமடைந்த பாபுல் சுப்ரியோ ஒரு மாணவரின் சட்டையைப் பிடித்து இழுத்திருக்கிறார்.

Student attacked Babul Supriyo

அதன்பின்னரே மாணவர்கள் அவரை தாக்கியுள்ளனர். ஆனால் இதை பாஜகவும் ஏபிவிபியும் வேறு விதமாக திரித்து கூறுகின்றன. இந்த பிரச்னையை அறிந்த மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார் பல்கலைக்கழகத்துக்கு வந்து பாபுல் சுப்ரியோவை மீட்டுச் சென்றார்.

பாபுல் சுப்ரியோ தாக்குதலை தொடர்ந்து ஏபிவிபி அமைப்பு தங்கள் ஆட்டத்தை அரங்கேற்றியுள்ளது. இடதுசாரி மாணவர்களை கொடூரமாக தாக்கி, பல்கலைக்கழகத்தின் வாயில் அருகே பொதுச்சொத்துகளை தீயிட்டு எரித்து பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டுள்ளனர்.

ABVP fire up

மாணவர்களிடம் அடிவாங்கிய பாபுல் சுப்ரியோ, தன்னைத் தாக்கிய மாணவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details