நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 303 இடங்களை கைபற்றி பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக ஆட்சி அமைத்ததிலிருந்தே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தேசிய குடிமக்கள் பதிவேடு அமல், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
மோடி ஆட்சியின் 100 நாட்கள் குறித்து ராகுல் விமர்சனம்!
டெல்லி: இரண்டாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து இன்றோடு 100 நாட்கள் ஆகிறது, அதனை வளர்ச்சி இல்லாத 100 நாட்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஆனால், இதே வேளையில் நாடு பொருளாதார மந்தநிலையில் சிக்கி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பொருளாதார வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில், இரண்டாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து இன்றோடு 100 நாட்கள் நிறைவடைகிறது.
இதுகுறித்து ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், "வளர்ச்சி இல்லாத மோடியின் 100 நாட்களுக்கு வாழ்த்துகள். ஜனநாயகம் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. இதனை விமர்சனம் செய்ய வேண்டிய ஊடகத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது. பொருளாதாரத்தை மீட்க வேண்டிய தெளிவான தலைமை பண்பு இல்லாத ஆட்சி" என பதிவிட்டுள்ளார்.