தமிழ்நாடு

tamil nadu

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய செயலி...!

By

Published : May 20, 2020, 5:11 PM IST

டெல்லி: ஜேஈஈ மெய்ன், நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்கள் தங்களை சோதனை செய்துகொள்வதற்காக புதிய மொபைல் செயலியை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிமுகப்படுத்தியுள்ளார்.

union-hrd-minister-launches-ai-powered-mobile-app-for-mock-tests-for-jee-main-neet-2020
union-hrd-minister-launches-ai-powered-mobile-app-for-mock-tests-for-jee-main-neet-2020

ஜேஈஈ மெய்ன், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்கள் தங்களை சோதனை செய்துகொள்வதற்காக தேசிய சோதனை நிறுவனமான என்டிஏ NATIONAL TEST ABHYAAS என்ற புதிய மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது. இதனை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த வீடியோவும் ட்வீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசுகையில், ''ஜேஈஈ மெய்ன், நீட் உள்ளிட்ட மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் பயிற்சி மையங்கள் மூடப்பட்டதால் வீட்டிலேயே பயிற்சி செய்யும் வகையில் மாற்று வழி கண்டறியப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் மாணவர்களே பயிற்சி சோதனைகளை மற்றவர்களுக்கு உதவும் வகையில் வழங்க முடியும். இன்டர்நெட் பயன்பாட்டைக் குறைப்பதற்காக ஆன் லைனில் வினாக்களை டவுன்லோடு செய்து ஆஃப் லைனில் பயிற்சி செய்துகொள்ளும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலி ஆண்ட்ராய்டு மொபைல்களில் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும். விரைவில் ஐஓஎஸ் மொபைல்களுக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலியில் சோதனை செயல்முறைகள் எவ்வாறு செயல்படும்?

ஒவ்வொரு நாளும் என்டிஏ-வால் ஒரு வினாத்தாள்கள் பதிவிடப்படும். அதனை மாணவர்கள் பூர்த்தி செய்து அப்லோடு (upload) செய்யவேண்டும். அதையடுத்து பதில்கள் சரிபார்க்கப்பட்டவுடன் பயிற்சி சோதனைக்கான முடிவுகளை மாணவர்கள் பெறலாம்.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக மத்திய அரசின் புதிய செயலி

இந்தச் செயலியைப் பற்றி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசுகையில், ''கரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஈடு செய்யவே இந்தச் செயலி சரியான நேரத்தில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

செயற்கை நுண்ணறிவு, இணையவழிக் கல்வி ஆகியவற்றின் பயன்பாடுகள் இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிரதமரின் கனவு திட்டத்திற்கு முடிவுரை எழுதப்படுகிறதா?

ABOUT THE AUTHOR

...view details